‛ஓய்வு எடுங்கள்’.. கலங்காமல் கடமையை செய்த பிரதமர் மோடி.. காணொலியில் ஆறுதல் சொன்ன மம்தா.. உருக்கம்
காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சில மணிநேரத்தில் பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி இறுக்கமாக இருந்த நியைில் அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆறுதல் கூறி ‛ஓய்வு எடுங்கள்' என கூறியது அனைவரையும் உருக வைத்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ரேசன் பகுதியில் வசித்து வந்தார். இவர் சமீபத்தில் 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக ஹீரா பென் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாய் ஹீராபென் மறைவு
இதையடுத்து பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று அவரை பார்வையிட்டார். மேலும் உடல்நலம் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஹீரா பென்னின் உயிர் பிரிந்தது. பிரதமர் மோடி குஜராத் சென்று தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தி அவரது உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தார். தாய் ஹீரா பென்னின் மறைவால் பிரதமர் மோடி இன்று மிகவும் சோகத்துடன் காணப்பட்டார்.

இறுக்கமாக பங்கேற்ற மோடி
இதற்கிடையே தான் இன்று பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை உள்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான நலத்திடங்களையும் துவக்கி வைக்க இருந்தார். தாய் ஹீரா பென் மறைவால் இது ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென்று புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி ஹீரா பென்னின் உடல் தகனம் செய்த அடுத்த சில மணிநேரத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி கலங்கிய நிலையில் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார்.

மம்தா பானர்ஜி பேச்சு
இந்த வேளையில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது தாய் ஹீரா பென்ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர் பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறியதோடு ஓய்வு எடுக்கும்படி கூறினார். அதோடு பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்தார். இதுதொடர்பாக காணொலி காட்சி வாயிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் கூறியதாவது:

வலிகை கிடைக்க பிரார்த்தனை
இன்று ஒரு சோகமான நாள். உங்களின் தாய் தவறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். தாயின் மறைவை தாங்கி கொள்ள கடவுள் உங்களுக்கு வலிமையையும், ஆசீர்வாதத்தையும் தர பிரார்த்திக்கிறேன். உங்களின் செயல்பாடுகள் மூலம் நீங்கள் உங்கள் தாயை நேசிக்க முடியும்.

ஓய்வு எடுங்கள்
நீங்கள் இன்று மேற்கு வங்காளத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் தாயின் மறைவால் உங்களால் வர முடியவில்லை. இருப்பினும் உங்களின் திட்டத்தின் மூலம் நீங்கள் எங்களை அணுகி உள்ளீர்கள். தகனம் செய்த கையோடு நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த வேளையில் நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பணிகளை குறைத்துது ஓய்வெடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்'' என உருக்கமாக கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications