For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிக்கடி இணைய சேவையை முடக்கும் நாடுகள் பட்டியலில் நம்பர் 1 யார் தெரியுமா!?

பாகிஸ்தான் பட்டியலில் 2ம் இடம்: அங்கு 19 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பல்வேறு காரணங்களால் ​இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான் காரணம்.

முக்கியமாக இந்தியாவில் நடக்கும் பல போராட்டங்களை இணையம்தான் ஒருங்கிணைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில்தான் அதிக அளவில், இணையம் முடக்கப்பட்டுள்ளது.

முதலில்

முதலில்

​இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இந்தியாதான் உலகில் அதிக முறை இணையத்தை தடை செய்துள்ளது. பல்வேறு காரணங்களை சொல்லி இணைய சேவையை தடை செய்துள்ளது. கடந்த 2016- 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 154 முறை முடக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு பல காரணம் சொல்லப்படுகிறது. மக்களின் போராட்டம் சமீப காலங்களில் அதிகமாகியுள்ளது. போராட்டம்,பதற்றமான சூழல் அதிகமாக நிலவி வருகிறது. இந்தியாவிலேயே அதிகமாக காஷ்மீரில் 60 முறை இணைய சேவை முடக்கப்படுகிறது. காஷ்மீருக்கு அடுத்து ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தில் இணையம் முடக்கப்படுகிறது. போராட்டம், மதக்கலவரம் காரணமாக அங்கு இணையம் முடக்கப்படுகிறது.

இழப்பு

இழப்பு

கடந்த ஐந்து வருடத்தில்தான் இந்தியாவில் இணையம் முடுக்கப்படுவது அதிக ஆகியுள்ளது. கடந்த 5 வருடத்தில் 16 ஆயிரம் மணி நேரம் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அதிகம்

பாகிஸ்தானில் அதிகம்

இந்தியாவோட ஒப்பிடும் போது மற்ற நாடுகளில் மிகவும் குறைவான அளவிலேயே இணையம் முடக்கப்படுகிறது. போர் நடக்கும் சிரியாவில் கூட இவ்வளவு முறை இணையம் முடக்கப்படவில்லை. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானில் 19 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கேயும் காஷ்மீர் பிரச்சனை காரணமாகவே இணையம் முடக்க்கப்படுகிறது.

English summary
India blocked up the internet for many times comparing to other countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X