For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை நீங்க தாராளமா நம்பலாம் – நம்பிக்கையான நாடுகள் வரிசையில் 2 ஆவது இடம்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிடித்துள்ளது.

உலக அளவில் பல நாடுகளின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருகின்றன.

இந்த நிலையில்அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2 ஆவது இடம் கிடைத்துள்ளது.

நம்பிக்கை குறித்த சர்வே:

நம்பிக்கை குறித்த சர்வே:

சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது.

6 நாடுகளுக்கு மட்டும் இடம்:

6 நாடுகளுக்கு மட்டும் இடம்:

இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

8 நியூட்ரல் நாடுகள்:

8 நியூட்ரல் நாடுகள்:

அதேபோல், நம்பகத்தன்மை குறைந்து வரும் நாடுகளாக ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. பிரேசில், மலேசியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் "இரண்டும் கெட்டான்" நாடுகளாக கருதப்படுகிறது.

பொருளாதார வீழ்ச்சி:

பொருளாதார வீழ்ச்சி:

டிரஸ்ட் இண்டக்ஸ் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பொதுமக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை 50 சதவீதத்திற்கும் கீழேயே உள்ளது. உலகில் உள்ள 3 இல் ஒரு பங்கு நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இரண்டு:

இந்தியாவுக்கு இரண்டு:

சென்ற ஆண்டு 5 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 2 ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததே காரணம் என்பதை இந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் நம்பிக்கை:

அரசியல் நம்பிக்கை:

குறிப்பாக, அரசியல் தலைவர்களின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை 82 சதவீதமாக இந்தியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய உச்சத்தை இந்தியா எட்டியுள்ளது.

English summary
Moving up the ranks, India has emerged as the second most trusted country in the world in terms of faith reposed on its institutions even as globally trust levels have fallen, says a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X