முதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி? வெளியானது இந்தியா டுடே பரபர சர்வே முடிவுகள்
கர்நாடகா தேர்தல் குறித்து தற்போது இந்தியா டுடே கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சி எப்படி இருந்தது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் குறித்து தற்போது இந்தியா டுடே கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு கருத்து கணிப்புகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு தற்போதைய ஆட்சி எப்படி இருக்கிறது என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த கருத்து கணிப்பின் படி 28 சதவீத கர்நாடக மக்கள் சித்தராமையா செயல்பாடு நன்றாக இருந்தது என வாக்களித்துள்ளனர். 31 சதவீத மக்கள் சித்தராமையா சுமாராக ஆட்சி செய்ததாக கூறியுள்ளனர். 20 சதவீதம் மக்கள் சித்தராமையா செயல்பாடு மோசம் என கூறியுள்ளனர்.
முக்கியமாக 9 சதவீதம் மக்கள் சித்தராமையா செயல்பாடு மிக மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் 2 சதவீதம் பேர் கருத்து கூற விரும்பவில்லை. இந்த கருத்து கணிப்பில் அவருக்கு எல்லோரும் எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் கலவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications