For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

By BBC News தமிழ்
|
ஆளில்லா விமானம்
Getty Images
ஆளில்லா விமானம்

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள டோக் கிராமம் அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இந்த ஆளில்லா விமானம் நுழைந்ததாக பிஎஸ்எஃப் கூறுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் பறக்கும் சத்தம் கேட்டதையடுத்து, பிஎஸ்எஃப் வீரர்கள் அந்த ஆளில்லா விமானத்தை சுட்டுக் கொன்றதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, காவல்துறை மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏஎன்ஐ நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி, 2.5 கிலோ எடையுள்ள இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் ட்ரோனில் இருந்து மீட்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருடன் மத்திய அரசு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டது.

இந்த அடிப்படையில் மேலும் ஓர் ஆளில்லா விமானத்தை இடைமறித்து கடத்தல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்பப்படை கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

• ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

• டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

• இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

• யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

BBC Tamil
English summary
Indian border security force shoots down pakistani drone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X