For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி லோயா மரணத்திற்கு மாரடைப்பு காரணமில்லை.. மனுவை விசாரிக்க ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்

நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாக மரணமடையவில்லை என்று கூறப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாக மரணமடையவில்லை என்று கூறப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார்.

Judge Loya did not die of heart attack: SC to hear application by Prashant Bhushan

இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. ஆனால் சர்ச்சை முடியும் முன்பே நீதிபதி லோயா திடீரென 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.

தற்போது நீதிபதி லோயாவின் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது லோயா மாரடைப்பு காரணமாக மரணம் அடையவில்லை என்று சிபிஐஎல் என்ற அமைப்பு மனு கொடுத்து இருக்கிறது. இதற்கான ஆதாரம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லோயா மருத்துவ சோதனை செய்த ஆதாரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டு இருக்கிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த அமைப்புக்கு சாதகமாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜர் ஆகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டு, நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

English summary
The Supreme Court has agreed to hear a petition claiming that there is medical proof to prove that judge Loya did not die of a heart attack. The application was filed by CPIL represented by advocate, Prashant Bhushan.He told the court that he had obtained medical proof through RTI and also doctors. This proves that the judge did not die of a heart attack. The court agreed to hear the application and posted the matter for further arguments on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X