For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

பெங்களூருவில் லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் பத்திரிக்கையாளர் கொடூரமாக சுட்டுக்கொலை-வீடியோ

    பெங்களூரு: லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

    Kannada journalist Gauri Lankesh shot dead in Bengaluru

    லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

    கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்தில்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் நடைபெறுகிறது. ஆனால், அதனைப் பெண்கள் மௌனத்துடன் கடந்து செல்கிறார்கள். அதுதான் அச்சம் தருவதாக உள்ளது என்று எழுதியிருந்தார்.

    Kannada journalist Gauri Lankesh shot dead in Bengaluru

    செவ்வாய்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது கௌரி லங்கேஷை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். கொலையாளிகள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Renowned Kannada journalist and editor of Lankesh Patrike Gauri Lankesh was shot dead outside her residence in Bengaluru on Tuesday night. Unknown assailants are said to have opened fire at the journalist outside her house at around 8.30 PM.
    Read in English: Gauri Lankesh shot dead
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X