கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் 37% பாஜக 35% மஜத 19% வாக்குவங்கி - சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு பாஜக வாக்கு வங்கி 35 சதவிகிதமாகவும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 19 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாகவும் தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Karnataka assembly election 2018: Congress 37% vote in 2018

கர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவிற்கு அதிக அளவில் இருப்பதாக இந்தியா டுடே கார்வி கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.

மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மே 15ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நாளாகும்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே கார்வி சேர்ந்து நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் வாக்கு வங்கி முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு பாஜக வாக்கு வங்கி 35 சதவிகிதமாகவும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 19 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாகவும் தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 37 சதவிகித வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. மஜத கட்சி கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Congress had secured 37 per cent vote in 2018 assembly election in karnataka. The party is likely, the opinion poll suggests, to retain its vote share but it will win less number of seats.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற