கர்நாடகா: சித்தராமையாவுக்கு 41% தலித் ஆதரவு... எடியூரப்பாவிற்கு 39% பிராமணர்கள் ஆதரவு - சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி?

  பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா மீண்டும் முதல்வராக 41 சதவிகிதம் தலித் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜத கட்சிகளிடையே பலத்த போட்டி நிலகிறது.

  karnataka election opinion poll 2018: BJP Needs to Settle Its Own Caste

  வெற்றி பெற்று யார் மீண்டும் முதல்வராவார் என இந்தியா டுடே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. 41 சதவிகிதம் தலித் மக்கள் சித்தராமையா முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  பாஜகவின் எடியூரப்பாவுக்கு 20 சதவிகித தலித்துகளே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், குமாரசாமிக்கும் 20 சதவிகித தலித்துகள் ஆதரவு அளித்துள்ளதாகவும் இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  கர்நாடகாவில் தலித் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி 23 சதவீதம் ஆகும். எனவே இங்கு போட்டியிடும் கட்சிகள் தலித் வாக்கு வங்கியை, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக பார்க்கின்றன என்பதால் அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும்.

  சித்தராமையா தலித் வாக்குகளை அப்படியே அறுவடை செய்ய வேண்டும் என்று குறி வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். தலித்துகளின் வாக்குகளை அப்படியே அள்ளினால் ஆட்சியை தக்க வைக்க உதவும் என்பது அவரது கணக்கு. பாஜக தலித்துகளுக்கு எதிரானது என்று சித்தரிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் எதிரொலித்துள்ளது.

  1989இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20ஆம் தேதி அதில் திருத்தங்களை மேற்கொண்டது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டத்தை திருத்தியமைத்ததை கண்டித்து வடமாநிலங்களில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இது கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

  தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும் எடியூரப்பாவிற்கு ஆதரவு என்னவோ 20 சதவிகிதம்தான் என ஒப்பீனியன் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சித்தராமையா மீண்டும் முதல்வராக 41 சதவிகிதம் தலித் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  இதனிடையே 34 சதவிகித பிராமண ஜாதியினர் ஆதரவு எடியூரப்பாவுக்கு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 20 சதவிகிதம் பிராமணர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 19 சதவிகிதம் பிராமணர்கள் குமாரசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

  எது எப்படியே கர்நாடகவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்குமா? பாஜக ஆட்சியை தட்டிப்பறிக்குமா என்பது மே 12ஆம் தேதி தெரிந்து விடும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  India Today Group is set to present the first exhaustive opinion poll on the Karnataka assembly elections. The poll, which has been conducted in all 224 constituencies of the state.The BJP stands stumped by 'The Dalit Question'. Dalit organisations across India, evident in the protests against the perceived 'dilution' of the SC/ST (Prevention of Atrocities) Act earlier this month.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற