For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. புகழ் குன்கா மீண்டும் அதிரடி.. 20 பெண்களைக் கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை உறுதி செய்தார்!

20 பெண்களை கொன்ற சயனைடு மோகனின் தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. புகழ் குன்கா மீண்டும் அதிரடி.. 20 பெண்களைக் கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை- வீடியோ

    பெங்களூரு: 20 பெண்களை பலாத்காரம் செய்து விட்டு சயனைடு கொடுத்து கொன்ற மோகனின் தூக்கு தண்டனையை கர்நாடாகா உயர்நீதிமன்றத்தின் ஜான் மைக்கேல் டி குன்கா அமர்வு உறுதி செய்துள்ளது.

    கர்நாடகாவில் உள்ள தென்கனராவை சேர்ந்தவர் மோகன் என்ற சயனைடு மோகன் (48). ஆதரவற்ற மற்றும் கணவனை பிரிந்த இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு சயனைடு கொடுத்து கொலை செய்து வந்தார்.

    20க்கும் அதிகமான பெண்கள் இவரால் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2009ல் மோகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்கனரா நீதிமன்றம், 2013ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

    கர்நாடகா ஹைகோர்ட்

    கர்நாடகா ஹைகோர்ட்

    இதேபோல் மேலும் 3 வழக்கிலும் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. மற்ற வழக்குகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சயனைடு மோகன் மனு

    சயனைடு மோகன் மனு

    இதில், சுனந்தா கொலை வழக்கும் ஒன்று. இந்த வழக்கிலும் தன்னை விடுவிக்கும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜான் மைக்கேல் டி குன்ஹா, ரவி மலிமட் அமர்வு, இந்த மனுவை விசாரித்து தென்கனரா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்தனர்.

    மயங்கி சரிந்த பெண்

    மயங்கி சரிந்த பெண்

    இடம்: கர்நாடக மாநிலம் ஹாசன் பஸ் நிலையம். ஆண்டு: 2009. பஸ் நிலைய பாத்ரூமுக்குள் சென்ற பெண் ஒருவர் மயங்கி பேச்சு, மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார். பல பெண்களும் ஓடிச்சென்று தண்ணீர் தெளித்து, பரபரப்போடு அந்த பெண்ணை எழுப்ப பார்க்கிறார்கள். ஆனால் முடியவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆண் உருவம், பஸ் நிலையம் அருகேயிருந்த லாட்ஜூக்குள் நுழைகிறது.

    மாயமான மர்மநபர்

    மாயமான மர்மநபர்

    லாட்ஜூக்குள் நுழைந்த அந்த ஆண், பாத்ரூமில் மயங்கி சாய்ந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் இருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகி விடுகிறது. இதனிடையே சிறிது நேரத்திலேயே, மயங்கிய பெண் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள், கொலை வழக்கு பதியப்படுகிறது. விசாரணையில் இறந்த பெண் பெயர் அனிதா என்று தெரியவருகிறது.

    மயங்கி சரிந்த பெண்கள்

    மயங்கி சரிந்த பெண்கள்

    போலீஸ் விசாரணையில், அனிதாவுடன் லாட்ஜில் ஒரு ஆண் தங்கியிருந்ததாகவும் அவரது பெயர் ஆனந்த் குலால் என்று பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுபோல ஒரு சம்பவம் அல்ல. பெங்களூர், மடிகேரி, மங்களூர், பெல்லாரி என பல லாட்ஜுகளின் அருகில் சுமார் 20 பெண்கள், அடுத்தடுத்த மாதங்களில், இதேபோல பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தனர்.

    கொன்றது ஒரே நபர்

    கொன்றது ஒரே நபர்

    உயிரிழந்த பெண்கள் அனைவரும் சயனைடு உட்கொண்டிருந்தனர். அனைத்து பெண்களுமே ஒரு ஆணுடன்தான் லாட்ஜில் தங்கியிருந்தனர். அந்த ஆணின் பெயர்கள் வேறு வேறாக பதியப்பட்டிருந்தாலும், விலாசம் ஒன்றாகவே இருந்தது. போலி விலாசமாக இருந்தாலும், ஒரே விலாசம் தரப்பட்டிருப்பதை வைத்து, குற்றங்களில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    காதலில் விழுந்த பெண்கள்

    காதலில் விழுந்த பெண்கள்

    இந்நிலையில்தான், அனிதாவின் செல்போன் எண்ணில் பேசியவர்களை வைத்து, மங்களூரில் மோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன. வேலைக்கு செல்லும் பெண்களை பஸ் நிறுத்தங்களில் கண்டு பேசி, நட்பை வளர்ப்பது மோகன் வாடிக்கை. அதன்பிறகு காதலிப்பதாக அடிபோடுவார். பல பெண்களை ஏமாற்றி கொன்றுள்ளார் மோகன்.

    மாத்திரையில் சயனைடு

    மாத்திரையில் சயனைடு

    சயனைடு மூலம் கொலை செய்வதுதான் சேஃப்டி என்ற முடிவுக்கு வந்து அந்த பாதையை மோகன் தேர்ந்தெடுத்தார். பொற்கொல்லர் போல நடித்து, நகைகளுக்கு பாலீஸ் செய்ய சயனைடு வேண்டும் என்று கூறி, சயனைடு வாங்கி சேர்த்து வைத்து, அதை மாத்திரையில் அடைத்து கொலை செய்துள்ளார்.

    தூக்கு உறுதி

    தூக்கு உறுதி

    அடுத்தடுத்து 20 பெண்களை பலாத்காரம் செய்து விட்டு சயனைடு கொடுத்து கொன்ற மோகனை 2009ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்கனரா நீதிமன்றம், 2013ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மோகனின் தூக்கு தண்டனையை கர்நாடாகா உயர்நீதிமன்றத்தின் ஜான் மைக்கேல் டி குன்கா அமர்வு உறுதி செய்துள்ளது.

    English summary
    The Karnataka high court on Wednesday upheld the death penalty imposed upon serial killer Cyanide Mohan in relation to murder of one Sunanda , a resident of Sullia in February 2008.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X