வதந்திக்கு கைது... அவதூறு வழக்கு: போலீஸ், ஓபிஎஸ்க்கு கட்ஜூ எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழக முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி, குடியரசுத் தலைவரை ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத்தலைவரை நான் வலியுறுத்துவேன். அரசமைப்பு இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்று கூறி குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், நீங்கள் அனைவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் மார்கண்டேய கட்ஜூ எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதிக்குப் பின்னர் மருத்துவமனை எந்த செய்திக்குறிப்பும் வெளியிடவில்லை.

வதந்தி பரப்பினால் கைது

வதந்தி பரப்பினால் கைது

முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ள போதும், வதந்திகள் பரவுவது நிற்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், இதுவரை சுமார் 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

மார்க்கண்டேய கட்ஜூ காட்டம்

மார்க்கண்டேய கட்ஜூ காட்டம்

காவல்துறையினரின் இத்தகைய கைது நடவடிக்கைகள், பல்வேறு தரப்பில் விமர்சிக்கப்பட்டும், கண்டனத்துக்குள்ளாகியும் வரும் நிலையில், இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், இது ஜனநாயகமா? இல்லை சர்வாதிகாரமா? என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலர், காவல்துறை மூத்த அதிகாரிகளுக்கு என்று குறிப்பிட்டு, கட்ஜூ தனது கருத்தை பதிவேற்றியுள்ளார்.

கைது நடவடிக்கை ஏன்?

கைது நடவடிக்கை ஏன்?

முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி நானும் எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். ஆனால், நீங்கள் அவதூறு பரப்புபவர்களை தான் கைது செய்கிறீர்கள் என நான் நம்புகிறேன். அதேசமயம், நீங்கள் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இதனை செய்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை? இது ஜனநாயகமா? இல்லை சர்வாதிகாரமா? தமிழகத்தில் கருத்து சுதந்திரம் என்பது அறவே இல்லையா? என்று கேட்டுள்ளார்.

தொடரும் கைது நடவடிக்கை

தொடரும் கைது நடவடிக்கை

மேலும் அவர், மேற்குவங்க அரசு, அம்மாநில முதல்வர் மம்தா குறித்த கார்டூன் பதிவுகளை வெளியிட்டதால் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கைது செய்தது. மகாராஷ்டிர அரசு கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை கைது செய்தது. நீங்கள் நாட்டுப்புற புரட்சி பாடகர் கோவனை கைது செய்தீர்கள். அதே போன்றல்லவா இந்த கைது நடவடிக்கைகளும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியை கலைக்க உத்தரவு

ஆட்சியை கலைக்க உத்தரவு

மேலும், சட்டத்துக்கு புறம்பான இந்த சம்பவங்களை நீங்கள் கைவிடவில்லை யென்றால், தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி, குடியரசுத் தலைவரை ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத்தலைவரை நான் வலியுறுத்துவேன். அரசமைப்பு இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்று கூறி குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், நீங்கள் அனைவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் கட்ஜூ காட்டம் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Katju angry over arrest on Jayalalithaa's Health Rumour arrest. He post his FB page, I will appeal to the President of India to impose President's rule in Tamilnadu under Article 356 of the Constitution on the ground that the Constitutional machinery has broken down in the state, and after President's rule is imposed all of you must be put up on trial and given harsh punishment.
Please Wait while comments are loading...