For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் பனிப்பொழிவு: கேதார்நாத் யாத்திரை 16ம் தேதி வரை நிறுத்தம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டேராடூன்: கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் சார்தாம் யாத்திரை வரும் 16 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பத்ரிநாத், கேதார்நாத் கோவில் கமிட்டியின் தலைவர் வி.டி.சிங் கூறுகையில், ''கேதார் பள்ளத்தாக்கில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 16 ஆம் தேதி வரை சர் தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Kedarnath and Badrinath yatra suspended till May 16

யாத்திரை வரும் பக்தர்கள் கோவிலுக்கு 4 கிலோ மீட்டர்கள் முன்னதாக சன்பிரயாக் மற்றும் லின்சாலி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பத்ரிநாத் நோக்கி செல்லும் பக்தர்கள் அனைவரும் வானிலை சீராகும் வரை ஜோஷிமாத் பகுதியில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

வரும் 16 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் லின்சாலி மற்றும் கேதார்நாத் இடையேயான ஹெலிகாப்டர் சேவைகளும் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Snowfall in the higher reaches of Garhwal Himalayas and intermittent rains in lower areas affected the Char Dham yatra today with pilgrimage to the famous Kedarnath shrine suspended till May 16 and yatra to Badrinath halted temporarily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X