For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும்: கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் 'பூச்சாண்டி'!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தை நரேந்திரமோடி செயல்படுத்தும் முன்பு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். நதிநீர் இணைப்பால் பேரழிவு ஏற்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Linking river could result in ecological disaster, says Karnataka minister

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாதாடிவருகிறார். தனியார் நிகழ்ச்சிக்காக

பெங்களூர் வந்த ஃபாலி நாரிமனை சந்தித்து பேச கர்நாடக நீர்பாசன அமைச்சர் பாட்டீல் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கங்கா-காவிரி நதிகளை இணைக்க வேண்டும்

என்பது பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமாக உள்ளது. இதில் கருத்து கூற நான் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. அதே நேரம், நதிநீர் இணைப்பு குறித்து இதற்கு முன்பு நடைபெற்ற பல

ஆய்வுகளின் முடிவுகளில், இந்த திட்டம் சில பகுதிகளுக்கு பலன் தந்தாலும், சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல மாநிலங்கள் தங்களுக்குள் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினையில்

ஈடுபட்டுள்ளதையும் அரசு கவனத்தில் வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் நதிநீர் மீது இருக்கும் உரிமையை மத்திய அரசு கவனத்தில் வைத்திருக்க வேண்டும். அனைத்து

மாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றார்.

English summary
Speaking to reporters here, water resources minister, M.B. Patil said that “I am not an expert on the issue. But I have gone through various reports which say that while in some places, it could be helpful, in others it could result in ecological disaster. We need to be careful when implementing the project,” he warned, noting that it will have to take into account the various inter-state river water sharing disputes as well. The Centre should take care to ensure that each state’s right over the water is protected. The project should not be taken up without consulting all the states” he insisted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X