"சித்தப்பா"வை இப்படிக் கைவிட்டுட்டாரே டிடிவி தினகரன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலாவின் கணவர் நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர் செய்தித் தொடர்பாளர் இல்லை, அவர் அதிமுகவில் உறுப்பினராகக் கூட இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக அறிவித்து கட்சியை ஒப்படைத்து சென்றார். ஆனால் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கேப்பில் சசிகலா அணியை தனது அணியாக மாற்றிக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் டிடிவி தினகரன் கட்சியில் இருந்தால் கட்சிக்கே ஆபத்து என்றுக் கூறி கட்சியில் இருந்து அவரை ஒதுக்குவதாகவும் அறிவித்தது எடப்பாடி அணி.

60 நாட்கள் கெடு

60 நாட்கள் கெடு

சிறைவாசத்துக்குப் பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடு விதித்தார். மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு தன் செயல்பாடுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் கூறி வந்தார்.

விலகி இருக்கிறேன்

விலகி இருக்கிறேன்

இந்நிலையில் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறேன் என்றார்.

சசிகலா கூறியுள்ளார்

சசிகலா கூறியுள்ளார்

ஆக. 4-ம் தேதிக்கு பிறகு நான் மீண்டும் கட்சி பணிகளை தொடங்குவேன் என்ற அவர், இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

நடராஜன் கூறுவது தவறு

நடராஜன் கூறுவது தவறு

உறவினர் என்ற முறையிலேயே சசிகலாவை சந்தித்தேன்,அரசியல் பேசவில்லை என்ற அவர் தமக்கும் திவாகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறினார். தனக்கும், திவாகரனுக்கும் இடையே சமரசம் செய்ததாக நடராஜன் கூறுவது தவறு என்ற டிடிவி தினகரன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.

உறுப்பினர் கூட இல்லை

உறுப்பினர் கூட இல்லை

நடராஜன் அதி.மு.கவின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல. நடராஜன் அதிமுக உறுப்பினர் கூட அல்ல என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார்.

மீண்டும் நடராஜனுக்கு தடை

மீண்டும் நடராஜனுக்கு தடை

ஜெ. மறைவுக்குப் பிறகு, நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என கூறி வந்தார் நடராஜன். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியில் நடராஜனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அப்போதே முட்டுக்கட்டை போட்டார் டிடிவி தினகரன். இந்நிலையில் நடராஜன் அதிமுகவில் உறுப்பினர் கூட இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran met press yesterday. He said M.Natarajan is not even a memeber of ADMK. TTV Dinakaran said Natarajan is not a spokes person of ADMK.
Please Wait while comments are loading...