பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி!

Subscribe to Oneindia Tamil

சித்ரகூட் : மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அங்கு தற்போது பா.ஜ.க ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சிங், சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை குறைவால் அவர் காலமானார். இதனால அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Madhya pradesh Chitrakoot by election Congress tops the result

கடந்த 9ம் தேதி இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் நடந்த நாளன்றே, சித்ரகூட் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 65% வாக்குப்பதிவு ஆகி இருந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி முன்னிலை வகித்தார். பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிலான்ஷு தோற்கடித்தார்.

மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் - பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே இந்தத் தொகுதியைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவியது. தற்போது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madhya pradesh Chitrakoot by election Congress tops the result with the difference of 14000 votes high than BJP. Still BJP is the Ruling party in the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற