For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்டர்நெட்டில் கள்ளக்காதல்: கணவர் மேல் பொய்ப் புகார் கொடுத்த மனைவி- நீதிமன்றம் கண்டனம்

Google Oneindia Tamil News

மங்களூர்: மங்களூரில் வரதட்சணை கேட்டதாக பொய் புகார் கொடுத்த பெண்ணை வன்மையாக கண்டித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

மங்களூரு பிக்கர்னகட்டேவை சேர்ந்தவர் ஷேக் நூர் முஹம்மது குல்ஸர். அவருடைய மகள் தாரானம்.

இவருக்கும் பாஜ்பேவை சேர்ந்த பொறியாளர் ரிஸ்வான் அலி ஷேக்கிற்கும் கடந்த 2007 நவம்பர் 21 இல் திருமணம் நடந்தது.

சமூக வலைதளத்தால் வினை:

ரிஸ்வான் மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். துபாயில் ரிஸ்வான் பணிக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருந்த தாரானத்துக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

விவாகரத்து வழக்கு:

இதையறிந்த ரிஸ்வான் மனைவியிடம் கேட்டார். உண்மையை ஒப்புக் கொண்ட பெண் விவாகரத்து பெற்று கொள்வதாக கூறினார்.

வரதட்சணைப் புகார்:

ஒரு மாதத்துக்கு பின் தாரானம் பாஜ்பே காவல் நிலையத்தில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார்.

பொய்ப் புகார்:

மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. புகாரில் உண்மையில்லை என ரிஸ்வான் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சிடி போட்ட கணவர்:

மேலும் சமூக வலைதளத்தில் தாரானம் உரையாடலை "சிடி"யாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

நீதிமன்றம் தள்ளுபடி:

இதையடுத்து ரிஸ்வான் உட்பட ஏழு பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரதட்சணை கொடுமை புகாரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தாரானத்தை எச்சரித்துள்ளது.

English summary
A false dowry harassment case lodged by wife and her family against the husband is reported in JMFC court in Mangalore recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X