உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி உள்ளன.

மீரட்டில் இருந்து உ.பி. தலைநகர் லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Meerut-Lucknow Rajya Rani Express derails in UP

ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. முதலில் 10 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விபத்தில் 2 பேருக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகையாக அறிவித்துள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

0121-6401215 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ரயில் விபத்து தொடர்பாக உதவி கோர முடியும். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meerut-Lucknow Rajya Rani Express derails in UP, Adityanath announces compensation.
Please Wait while comments are loading...