For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷா சுரங்க துறை அதிகாரி மாயம்? கடத்திய சுரங்க மாஃபியா?

By Mathi
Google Oneindia Tamil News

Missing Odisha mines officer's mobile traced in UP
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில சுரங்க துறை அதிகாரியான இப்ராஹிம் ஷரீப் கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரை தேடும் பணியில் அம்மாநில போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒடிஷா மாநில சுரங்கத்துறையில் கடந்த 2011ஆம் ஆண்டு சேர்ந்தார் இப்ராஹிம். அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சுரங்க முறைகேடுகளை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில் சுரங்க முறைகேடுகள் எப்படியெல்லாம் நடைபெறுகின்றன? அரசியல்வாதிகளே சட்டத்தை எப்படியெல்லாம் மீறுகின்றனர் என்று தமது வீட்டில் மனைவியிடம் கூறி புலம்பியிருக்கிறார்.

இதனிடையே திடீரென இப்ராஹிம் காணாமல் போயிருக்கிறார். அவரது மொபைலை வைத்து இருப்பிடத்தை அறிய போலீசார் அறிய முயன்றனர். அது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முகல்சராய் என்ற இடத்தை நவம்பர் 26-ந் தேதியன்று காட்டியது. அதன் பின்னர் மொபைல் இருப்பிடம் தெரியவில்லை.

சுரங்க மாஃபியா கும்பல்தான் அவரை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று ஒடிஷா போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

English summary
It's six days since Ibrahim Sharif, 34, assistant controller of mines with the Odisha government, went missing from Patiala town. Odisha cops are clueless about him, despite tracing his mobile to Mughalsarai in Uttar Pradesh, 900 km from Bhubaneshwar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X