ஆட்சி அமைக்கப் போவது யார்... எம்எல்ஏக்கள் கூட்டங்கள்.... கட்சிகள் பரபர!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க கட்சி எம்எல்ஏக்கள் கூட்டங்களுக்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்பாடு செய்துள்ளன.

  கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

  MLAs meeting to be held today

  பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.

  இந்த நிலையில், 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. மஜதவின் குமாரசாமியை முதல்வராக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.

  இரு தரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

  ஆட்சி அமைப்பது குறித்து பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களின் கூட்டமும் காலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடகாவில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  MLAs meetings arranged by all the parties today in bengaluru.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற