இந்துத்துவா கும்பல் அட்டூழியம்- முஸ்லிம் முதியவரை ஜெய்ராம் சொல்ல வலியுறுத்தி 25 முறை அறைந்த கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதியவரை 25 முறை கன்னத்தில் அறைந்த நபர்-வீடியோ

  ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அடிக்கடி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அதிக அளவில் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த நிலையில் நேற்று முஸ்லீம் முதியவர் ஒருவர் இளைஞர் ஒருவரால் மோசமாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். 25 முறை அவர் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார்.

  இது வீடியோவாக தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியுள்ளது.

  வைரல்

  வைரல்

  இந்த வீடியோ வினய் மீனா என்ற 18 வயது நபரால் பேஸ்புக்கில் ஏற்றப்பட்டு உள்ளது. அவர்தான் அந்த முஸ்லீம் முதியவரை 25 முறை கன்னத்தில் அறைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும் படி கூறியுள்ளார்.

  போராட்டம் நடந்தது

  போராட்டம் நடந்தது

  இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து பெரும் பிரச்சனை ஆனது. இந்தச் சம்பவம் நடந்த சிரோஷி நகரில் போராட்டம் வெடித்தது. முஸ்லீம் குழு போலீசிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியது.

  போலீஸ் நடவடிக்கை

  போலீஸ் நடவடிக்கை

  இந்த நிலையில் போலீஸ் வினயை கைது செய்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் யாரும் பரப்பி பிரச்சனை செய்ய கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது அங்கு மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

  முடக்கம்

  முடக்கம்

  தற்போது பேஸ்புக்கும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. வினயின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Muslim man slapped 25 times’, by a 18 year old man Vinay Kumar. He has slapped to say Jai Shri Ram. Thi video goes viral in social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற