ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துவிட்டார்.. மோடி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரதமர் மோடி அதை வரவேற்று டிவிட் வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக நிதிஷ் குமார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து டிவிட் வெளியிட்டுள்ளார்.

 Narendramodi tweets in support of Nitish Kumar

பிரதமர் அலுவலக டிவிட்டர் கணக்கில் இருந்து அல்லாமல், தனது சொந்த கணக்கிலிருந்து இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் டிவிட் வெளியிட்டுள்ளார் மோடி.

இதன் மூலம், பாஜகவோடு கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் மோடி. பாஜக-ராஷ்டிர ஜனதாதளம் இணைந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Narendramodi tweets in support of Nitish Kumar's "joining fight against corruption" after he quit as Bihar Chief Minister
Please Wait while comments are loading...