For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி, தினகரன் தேர்தலில் போட்டியிட 'நிரந்தர' தடை? தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அவசர ஆலோசனை!

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தி வருகிறார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுத்து பிடிபட்டுள்ள சசிகலா, தினகரன் இருவரும் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருகோடியே 30 லட்சம் பணத்துடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரனிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சப் பணம்.

Nasim Zaidi discussion for two leaves symbol issue

இரட்டை இலை சின்னத்திற்காக ரூ. 60 கோடி வரை டிடிவி தினகரன் பேரம் பேசியிருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனுடன் டெல்லி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

இதனிடையே தேர்தல் ஆணையத்தை லஞ்சப் பணம் மூலம் வளைக்க முயன்றது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். லஞ்சம் தர முயன்ற சசிகலா, தினகரன் இருவரும் இனிவரும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட முடியாத வகையில் தடை விதிப்பது குறித்து நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Chief Election Commissioner Nasim Zaidi discussion for the AIADMK's two leaves symbol bribe issue. FIR against TTV Dinakaran by Delhi police crime branch for allegedly offering bribe for ADMK's 'Two leaves' symbol.Delhi man for getting the Two Leaves symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X