For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோய்களை பரப்பும் டாக்டர்களின் வெள்ளை கோட்!… அதிர்ச்சி ஆய்வு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: போலீஸ் என்றால் காக்கிச்சட்டை... கறுப்பு கவுன் என்றால் வக்கீல், வெள்ளை கோட் போட்டவர் டாக்டர் என்ற அடையாளம் நம்முடைய மனதில் பதிந்து விட்டது. ஆனால், இப்போது டாக்டர்கள் வெள்ளை கோட் அணிய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

அதற்குக் காரணம் இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அணியும் நீண்ட வெள்ளை கோட் மூலம் மருத்துவமனையில் பல நோய்கள் பரவுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவேதான் டாக்டர்கள் வெள்ளை கோட் அணிய தடை விதிக்க வேண்டும் என பெங்களூரு மருத்துவ கல்லூரி சார்பில் மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தன்னலமற்ற சேவை, தூய்மையின் அடையாளமாக டாக்டர்கள் அணியும் கோட்டினை தடை செய்ய இப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரூவில் உள்ள யெனபோயா மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார் எட்மண்ட் பெர்னான்டஸ். இவர், நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை பிஎம்ஜே எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியிட்டுள்ளார்.

நோய் தொற்று தடுக்க வழி

நோய் தொற்று தடுக்க வழி

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்றுகள் குறித்து அவ்வப்போது ஒவ்வொரு மருத்துவமனையும் சோதனை நடத்த வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. எனினும், நோய்த்தொற்று ஏற்படாதவாறு தடுக்க சுலபமான வழி ஒன்று உள்ளது.

ஆபத்தான கோட்கள்

ஆபத்தான கோட்கள்

இந்தியாவில் டாக்டர்கள் அணியும் கோட் மூலம் தான் பல நோய்கள் மருத்துவமனைகளில் பரவுகின்றன. இந்த கோட்கள் மிகவும் ஆபத்து மிகுந்தவை. இவைகளை தவிர்க்க வேண்டும்.

கிருமிகள் தொற்றுதல்

கிருமிகள் தொற்றுதல்

இந்தியாவில் டாக்டர்கள் வெள்ளை கோட் அணியும் முறை 19ம் நூற்றாண்டிலிருந்து வழக்கத்தில் உள்ளது. இந்த கோட்களில் விஷத்தன்மை மிகுந்த பல கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன.

பரவும் கிருமிகள்

பரவும் கிருமிகள்

மருத்துவ மாணவர்கள் இந்த கோட்டை அணிந்து வெளியில் செல்வதால், மருத்துவமனைக்கு வெளியிலும் இந்த நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவைகளிலும் இந்த நோய் கிருமிகள் ஒட்டிக் கொள்கின்றன.

உலா வரும் டாக்டர்கள்

உலா வரும் டாக்டர்கள்

பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள் இருப்பதில்லை. காரணம் இடப் பற்றாக்குறை. எனவே பல மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயும் வெள்ளைக் கோட்டுகள் அணிகின்றனர். இன்னும் சிலர் அதனை அணிந்து கொண்டு ஷாப்பிங் மால்களுக்குக் கூட செல்கின்றனர்.

துவைச்சு போடுங்கப்பா

துவைச்சு போடுங்கப்பா

டாக்டர்கள் அணியும் வெள்ளை கோட்கள் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது பல நாட்களுக்கு ஒருமுறையோ தான் சுத்தம் செய்யப்படுவதால் நோய் கிருமிகள் தாராளமாக பெருகுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோட்களுக்கு அரசு தடை விதித்தால் மட்டுமே மருத்துவமனைகளில் நோய் பரவுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தடை

ஐரோப்பாவில் தடை

2007 ம் ஆண்டு இதனை கண்டுபிடித்த ஐரோப்பிய நாடுகள், வெள்ளை கோட்களை டாக்டர்கள் பயன்படுத்த தடை விதித்தன. இருப்பினும் 2009ம் ஆண்டு அதனை ஏற்க மறுத்த அமெரிக்கா, பாரம்பரியத்தை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.

சிறந்த டாக்டர்கள்

சிறந்த டாக்டர்கள்

2007ம் ஆண்டு இத்தகைய வெள்ளைக் கோட்டுகளை அணிய இங்கிலாந்து தடை செய்தது. வெள்ளைக் கோட்டு என்பது ஓர் அடையாளம் மட்டுமே. அதுவே உங்களுக்கு சிறந்த மருத்துவர் என்ற பெயரை பெற்றுத் தந்து விடாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு மருத்துவமனையும் தங்களிடம் பணியாற்றும் ஒவ்வொரு மருத்துவருக்கும் மக்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி பெயர் பொறித்த அடையாள அட்டைகளை வழங்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Banning Indian doctors and medical students from wearing long-sleeved white coats could reduce the spread of infections in hospitals, says a new study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X