For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்! லாலுவின் 2 மகன்கள், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். அவருடன் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ்பிரதாப், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் செளத்ரி உட்பட 28 பேர் பதவியேற்றனர்.

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியின் சட்டசபை தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Nitish takes oath as Bihar CM, Lalu’s sons in Cabinet

பின்னர் நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று பாட்னா காந்தி மைதானத்தில் நிதிஷ்குமார் பதவியேற்பு விழா நடைபெற்றது.

முதலில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக பதவியேற்கும் 27 பேரின் பட்டியல் முழுமையாக வாசிக்கப்பட்டது.

பின்னர் 2வதாக லாலுவின் இளையன் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் பதவியேற்றார். இதன் மூலம் அவர் துணை முதல்வராவது உறுதி செய்யப்பட்டது.

3வதாக லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப், அவரைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றார். இதில் தேஜ்பிரதாப் பதவி பிரமாணத்தை தவறாகப் படிக்த்தால் ஆளுநர் குறுக்கிட்டு மீண்டும் ஒருமுறை பதவி பிரமாணத்தை வாசிக்க செய்தார்.

மேலும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளத்ரியும் அமைச்சராக பதவியேற்றார். மொத்தம் நிதிஷ்குமார் உட்பட 28 பேர் பதவியேற்றனர்.

English summary
Nitish Kumar took oath as Bihar Chief Minister on Friday. Both sons of RJD leader Lalu Prasad Tej Pratap and Tejaswi also took oath as minister in the Nitish Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X