மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானி அதிரடி நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வந்த பஹ்லாஜ் நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது.

Pahlaj Nihalani removed from his post as a CBFC president

இதனைத் தொடர்ந்து இன்று பஹ்லாஜ் நிஹலானி, மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வித்யா பாலன் தணிக்கைத் துறையின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central Board of Film Certification president Pahlaj Nihalani has been removed from his post today.
Please Wait while comments are loading...