For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்கு கேரளாவில் தடை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினம், நாட்டு தலைவர்கள் நினைவு தினம் போன்ற நாட்களில் தேசிய கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சிறிய அளவிலான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் மூவர்ண தேசிய கொடி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.

Plastic-made national flags banned

குடியரசு தின, சுதந்திர தின விழாக்களுக்குப் பிறகு, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் சாலைகளிலும், வடிகால்களிலும் தூக்கி வீசப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு கம்பளி, பருத்தி, காதி மற்றும் பட்டு ஆகியவற்றில் தயாரிக்கப்படும் தேசிய கொடிகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என கேரள மாநில அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

English summary
The state government has banned the production and sale of plastic based national flags.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X