பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணம் இதுதான் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்போது போர்ச்சுக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 24 ஆம் தேதி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக 24ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டுக்கு அவர் செல்கிறார்.

pm modi visit to netherland and portugal

இதையடுத்து 25, 26ந் தேதிகளில் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் டொனல்ட் ட்ரம்பை வருகிற 26ம் தேதி பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் உள்ள கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு ட்ரம்ப்பை, மோடி முதன்முறையாக சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நெதர்லாந்து நாட்டில் வரும் 27ம் தேதி மோடி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அங்கு அந்நாட்டு அரசரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Ministry of External Affairs (MEA) on Friday announced that Prime Minister Narendra Modi will visit Portugal on June 24 and The Netherlands on June 27 to take bilateral economic, trade and other relations with these two countries forward.
Please Wait while comments are loading...