For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.. நாடாளுமன்ற மோதல் பற்றி பிரணாப் வேதனை

Google Oneindia Tamil News

டெல்லி : நாட்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி சிந்தித்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 69 வது சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது...

pranab

அரசியல் அமைப்பு அளித்த மிகப்பெரிய அமைப்புதான் ஜனநாயகம். கல்வி வேலை மூலம் பெண்களின் நிலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்குள்ளானால் கவனமாக யோசிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் விவாதம் நடத்துவதற்கான இடமின்றி போராடுவதற்கான இடமாக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்குள்ளானால் கவனமாக யோசித்து தீர்வு காண வேண்டும். பொருளாதார கொள்கைகள் பட்டினியை ஒழிப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

மக்கள் சிந்திப்பதற்கான தருணம் வந்துள்ளது. மக்களை பற்றி அனைத்து கட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஜனநாயக அமைப்புகளுக்கு நெருக்கடி வந்தால், மக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து தீர்வு காண வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் களமாக அண்டை நாடுகள் இருக்க கூடாது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

வங்க தேசத்துடனான் எல்லைப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது உற்சாகமூட்டுகிறது. நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக்காத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு தனது குடியரசுதின உரையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

English summary
Parliament has been converted into an arena of combat rather than debate, President Pranab Mukherjee said today observing that institutions of democracy are under stress and "correctives must come from within.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X