தேவ கவுடாவுக்கு இன்று பிறந்த நாள்.. பரபரப்பான சூழலில் போனில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மஜத கட்சி தலைவர் தேவ கவுடாவை போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து பாஜகவின் எடியூரப்பா நேற்று கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கவிழ்க்க மஜதவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து அதற்கான பணியில் இறங்கியுள்ளனர். பாஜகவினரிடம் இருந்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க அவர்கள் ரிசார்ட் ரிசாட்டாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தேவ கவுடாவுக்கு மோடி வாழ்த்து

தேவ கவுடாவுக்கு மோடி வாழ்த்து

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடா இன்று தனது 86-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தேவேகவுடாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி பிறந்த நாள் வாழ்த்து

மோடி பிறந்த நாள் வாழ்த்து

தேவ கவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவ கவுடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் எச்.டி தேவ கவுடாவை தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். தேவ கவுடா, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து - பரபரப்பு

பிரதமர் வாழ்த்து - பரபரப்பு

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி, தேவ கவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Modi wishes Deva gowda for his birthday. Modi said this in his twitter page.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற