For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டில் கோளாறு.. ஐஆர்என்எஸ்எஸ்எச்-1 செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வி!

பிஎஸ்எல்வி சி39- ராக்கெட்டிலிருந்து ஐஆர்என்என்எஸ்எச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்திய பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதால் ஐஆர்என்எஸ்எஸ்எச்-1 செயற்கை கோளை ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். எச்-1 செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி 39- ராக்கெட் மூலமாக வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

PSLV C39 mission unsuccessful, says ISRO

விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து 19 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக் கோள் பிரிந்து விண்வெளியில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் 3 நிலைகள் இயல்பாக இயங்கின.

4-வது கட்டத்தில் ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த வெப்பத் தடுப்பு பிரிந்து செயற்கைக் கோள் வெளியே வர வேண்டும். ஆனால் இந்த வெப்பத் தடுப்பு பிரியாததால் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்துவதில் தோல்வி ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், 3 நிலைகளும் இயல்பாகவே இயங்கின. 4-வது நிலையில்தான் சிக்கல் ஏற்பட்டது. இந்த தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

English summary
ISRO Chairman Kirankumar said that the IRNSS-1H satellite mission was unsuccessful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X