For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதன்கோட் தாக்குதல்: ராணுவத்தை அனுப்பிதற்காக பஞ்சாப் அரசிடம் ரூ.6.35 கோடி கேட்கிறது மத்திய அரசு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ராணுவ படையை பதன்கோட் விமானப்படை தளத்துக்கு அனுப்பிதற்காக ரூ.6.35 கோடியை தருமாறு பஞ்சாப் மாநில அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஜனவரி 2-ம்தேதி பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைபபைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக துணை ராணுவப் படையை அனுப்பியது மத்திய அரசு.

Punjab Refuses To Pay 6 Crore Bill To Centre For Operations

80 மணிநேர சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஜனவரி 27-ம் தேதி வரை துணை ராணுவப்படை பஞ்சாபில் முகாமிட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் துணை ராணுவத்திற்கு ரூ.6.35 கோடி செலவானதாகவும், அதை கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய அரசு பில் அனுப்பியுள்ளது. இந்த தொகையை தர பஞ்சாப் அரசு மறுத்துவிட்டது.

ஆனால் பதான்கோட் தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டது இந்திய நாட்டின் நலன் சார்ந்தது. எனவே மாநில அரசிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவத்தினர் பதன்கோட் மற்றும் எல்லைப் பகுதிகளில் மட்டுமே முகாமிட்டிருந்தனர். அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடிவடிக்கையை மாநில அரசு தான் மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக - அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab government has refused to pay a bill of Rs. 6.35 crore to the Center for deployment of paramilitary forces during and after the terror attack at Pathankot air force base.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X