For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்சி ட்ரைவர் அக்கவுண்டில் திடீரென ரூ. 9, 806 கோடி.... டெபாசிட் செய்தது யார்?

பஞ்சாப்பில் டாக்சி ட்ரைவர் ஒருவரின் அக்கவுண்டில் 9806 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கிரெடிட் ஆனது. இதுதொடர்பாக தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

பாட்டியாலா: பஞ்சாப்பில் டாக்சி ட்ரைவர் ஒருவரின் வங்கிக்கணகில் 9,806 கோடி ரூபாய் கிரெடிட் ஆனது. ஆனால் அடுத்த நாளே அந்தப் பணம் அவரது அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்வீந்தர் சிங் என்பவர் டாக்சி ட்ராவராக உள்ளார். இவருக்கு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்கு ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.

Rs. 9806 crore credited in taxi diver A/c : IT starts probe

இவரது இந்தக் கணக்கில் அண்மையில் 9806 கோடி ரூபாய் பணம் திடீரென வரவு வைக்கப்பட்டதாக அவரது கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்தப் பணம் அடுத்த நாளே அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் கூற மறுத்த வங்கி அதிகாரிகள் அவரது பழைய பாஸ் புக்கை பெற்றுக்கொண்டு புதிய பாஸ் புக்கை கொடுத்துள்ளனர்.

இந்த விஷயம் வருமான வரித்துறையின் காதுக்கு சென்றதால் அதிகாரிகள் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். யாருடைய வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை செலுத்தப்பட்டது என்றும் அவர்கள் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Punjab Rs 9806 crore credited in taxi driver account. and the other day that huge amount taken from his account. regarding this the Income tax department started inquire now in the particular bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X