For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும்.. வானிலை மையம் வார்னிங்

வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய வானிலை மையம் வார்னிங்- வீடியோ

    டெல்லி: வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    டெல்லியில் இன்று அதிகாலை கடுமையான புழுதி புயல் ஏற்பட்டதால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியதால் டெல்லி மாநகர் முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

    புயலுக்கு இளைஞர் பலி

    புயலுக்கு இளைஞர் பலி

    டெல்லியில் இன்று வீசிய புழுதி புயலால் 18 வயது இளைஞர் ஒருவர் பலியானார். 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

    வாகனங்கள் சேதம்

    வாகனங்கள் சேதம்

    பலத்த காற்றுடன் வீசிய புழுதி புயலால் பெரும்பாலான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. புழுதி புயலால் 13 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 14 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

    இதுவரை 80 பேர் பலி

    இதுவரை 80 பேர் பலி

    கடந்த 13ந்தேதியில் இருந்து இடி மற்றும் மின்னலால் 5 மாநிலங்களில் 80 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 51 பேர் உத்தர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் ஆவர்.

    72 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

    72 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

    இந்நிலையில் வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் 50 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Indian Meteorological center has warned North states will get sand storm within 72 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X