சசியை யாரும் பார்த்துவிடக்கூடாதாம்.. கம்பிக்கேட்டை துணியை போட்டு மூடிய சிறை நிர்வாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலாவை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர் அடைக்கப்பட்டுள்ள கம்பிக் கேட்டை துணியை போட்டு சிறை நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறை கஷ்டம் தெரியாத அளவுக்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டு இருப்பது ஆய்வில் அம்பலமாகியுள்ளளது.

Sasikala prison rooms are closed with a cloth

சசிகலாவுக்கு டிவி பார்க்க, யோகா செய்ய என 5 தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறையில் சிறிய அளவிலா மெத்தை, குக்கர், சமைப்பதற்கான பாத்திரங்கள் என சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் டப்பாக்களில் மளிகை பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டிருப்பதும் அந்த போட்டோவில் அம்பலமாகியுள்ளது.

மேலும் சசிகலாவை சிறையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர் பயன்படுத்தும் அறைகளில் உள்ள கம்பிக்கேட்டுகள் வெள்ளை நிற ஸ்க்ரீன் துணியால் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

Sasikala enjoying all facilities within prison, photos leaked-Oneindia Tamil

இது சசிகலாவை பார்க்க கூடாது என்பதற்காகவா அல்லது சசிகலா அளிக்கப்பட்டுள்ள வசதிகளை பார்க்கக்கூடாது என்பதற்காகவா என்பது உதவிய சிறைத்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala prison rooms are closed with a cloth. Sasikala has cooker and dishes in her room.
Please Wait while comments are loading...