For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வுக்கு ஏப்.5 வரை விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு 5 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மேலும் 5 நாட்கள் கூடுதலாக அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு

தமிழகத்தில் நீட் தேர்வு

தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு ஜூன் 8ஆம் தேதி வெளியாகிறது.

மார்ச் 1 கடைசி நாள்

மார்ச் 1 கடைசி நாள்

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி கடைசி நாளாக கூறப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா இல்லையா என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருந்த பல மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. எனவே தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மாணவர்கள் வழக்கு

மாணவர்கள் வழக்கு

எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு பல மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

ஏப்ரல் 5 வரை அவகாசம்

ஏப்ரல் 5 வரை அவகாசம்

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 25வயது நிர்ணயம் செய்த சிபிஎஸ்இ உத்தரவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
SC extends time to apply for NEET exam frm today till April 5, gives grace period aftr quashing d CBSE's notice of 25 yrs age limit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X