பாபர் மசூதி நில விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாபர் மசூதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்து இருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கினார்கள். சன்னி வஹ்பு வாரியம் , நிரோமி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

SC rejects 14 pleas to intervene in Ayodhya dispute case

இந்த நிலையில் இந்த ஒதுக்கீடு விவகாரத்தில் இன்னும் பிரச்சனை நிலவி வருகிறது. மேலும் அந்த நிலத்தில் இந்துத்துவா அமைப்புகள் ராமர் கோவில் கட்ட இருப்பதாக கூறியுள்ளதால் பிரச்சனை நிலவி வருகிறது.

இதுகுறித்த வழக்கில் மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படி 14 பேர் வரை மனுதாக்கல் செய்து இருந்தார்கள். ஆனால் சன்னி வஹ்பு வாரியம் , நிரோமி அகாரா, ராம் லல்லா மூன்று பேரை தவிர வேற யாரையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி 14 பேர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதில் பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சாமியின் மனுவும் ஒன்றாகும். அந்த சர்ச்சையான நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று சு.சாமி மனுதாக்கல் செய்து இருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SC rejects 14 pleas to intervene in Ayodhya dispute case. It rejects Subramanian Swamy plea also.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற