சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (86)

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக அனில் திவான், ஜெயின் ஹவாலா வழக்கு, போபால் விஷவாயு வழக்கு, பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர்.

Senior advocate Anil Divan no more

காவிரி வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வாதாடியவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஃபாலி எஸ். நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவான் அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனில் திவான் நேற்று காலமானார். அவருக்கு வயது (86). மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கியவர் அனில் திவான். இவரது மகன் ஷியாம் திவானும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior advocate, Anil Divan who represented Karnataka in the Cauvery waters matter passed away on Monday.
Please Wait while comments are loading...