குஜராத்தில் தமிழ் பள்ளிகளை மூடுவதா? தமிழ்நாட்டில் பிற மொழி பள்ளிகளை பூட்டுவோம்..வேல்முருகன் வார்னிங்
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகள் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என்றும்.. அந்த பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள பிற மொழி பள்ளிகளை பூட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், கடந்த 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் இடம் பெயர்ந்துள்ளனர்.

பேரதிர்ச்சி அளிக்கிறது
இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, குஜராத்தில் உள்ள சில பகுதிகளில், 1910-ம் ஆண்டில் தமிழ் வழி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகமதாபாத்தில் 100 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிகள், கடந்த 2 ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேதனை அளிக்கிறது
பள்ளி நடத்துவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்த போதும், குஜராத் அரசு அதனை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாமல் தவித்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழ் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தமிழ் மாணவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாகி இருக்கிறது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத தமிழ் சமூகம், மோடி கும்பலின், நயவஞ்சகத்தையும், நளினப்பேச்சையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடி
தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார். தமிழ் பேசுவதும், காசி தமிழ் சங்கமம் நடத்துவதும், எதிர் வரும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலையொட்டியே என்ற சூழ்ச்சியை கூட புரிந்து கொள்ள முடியாத ஏமாளி தமிழர்களாக உள்ளோம். தமிழ் மொழி என்றால், மோடி, அமித்ஷா கும்பலுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டை தவிர, இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே எரிச்சலையூட்டும். இதற்கு சான்றுகள் ஏராளம்.

இழுத்து பூட்டும் என எச்சரிக்கை
எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க, குஜராத் அரசை வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை, குஜராத் அரசு மறுக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிற மொழி பள்ளிகளை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி இழுத்து பூட்டும் என எச்சரிக்கை விடுக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications