சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காங்டாக்: சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா கொண்டாட்டங்கள் திங்களன்று தொடங்கின. இதற்காக ஞாயிறு இரவு காங்டாங் வந்தடைந்தார் ஏ.ஆர். ரகுமான்.

Sikkim CM announces AR Rahman as Brand Ambassador of State

அவரை மேஃபேர் ரிசார்ட்டில் சிக்கிம் அமைச்சர்கள் உஜென் டி கியாட்ஸோ பூட்டியா, கதானி உள்ளிட்டோர் வரவேற்றனர், இதனைத் தொடர்ந்து திங்களன்று குளிர்கால திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கின.

இத்திருவிழா 11 நாட்கள் சிக்கிம் மாநில அரசால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங், தங்களது மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனை மேடையில் இருந்த ஏ.ஆர். ரகுமானும் ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sikkim Chief Minister Pawan Chamling announced that the Academy Award winning music composer AR Rahman’s name for the State on Monday at the Winter Carnival.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X