ஒருத்தன் தான் கேட்பான்... அவனுக்கும் காது கேட்காது...- சுப்பிரமணிய சாமியை கலாய்த்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விரைவில் தமிழக அரசு கவிழும் என்றும் அதன் பின் தினகரன் முதல்வராகி விடுவார் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்தை டுவிட்டரில் பல்வேறு தரப்பினரும் கிண்டல் செய்துள்ளனர்.

Subramaniya swamys tweet and tamilians comments

தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வதில் சுப்பிரமணிய சாமிக்கு நிகர் அவர் தான். ஆனால் அந்த கருத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சாமி, விரைவில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பார்த்தால் அப்படி தான் உள்ளது. விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், தினகரன் முதல்வராகி விடுவார், அதனால் அதிமுகவை விரைவில் இணைக்கப்பாருங்கள் என்று சுப்பிரமணிய சாமி டுவிட் செய்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலவிதமாக கிண்டல் பதில்களை அளித்துள்ளனர். "எப்படி சார் சசிகலா ஆவார்னு சொன்னீங்களே அந்த மாதிரியா" என்று ஒருவரும், மற்றொருவர் "நீங்கள் சொல்வதை ஒருத்தன் கேட்பான், ஆனால் பாவம் அவனுக்கு காது கேட்காது" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூட கணக்கிலிருந்து பதிலளித்திருந்த ஒருவர், "சாமி உங்களின் பிறப்பு சான்றிதழை நீங்கள் காட்டினால் தான் 2018ஆண்டு டுவிட்டரில் தொடர முடியும்" என பதிவிட்டிருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran will soon become CM, Better unite soon, says Subramaniya Swamy. In a twitter comment he added, very soon tn govt will fall and the outcome of the ADMK MLA meet denotes it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற