மருத்துவ மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு ரத்து: மேல்முறையீட்டு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான உள் ஒதுக்கீடு 85% அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வைத் தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு எழுதினார்கள். அதில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் சமச்சீர் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் 'நீட்' தேர்வில் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் மாநில தேர்வாணையம் நடத்திய பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள்.

Supreme Court reserves verdict in 85% reservation for Medical Student

அதனால் மாநில அரசு, இம்மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமிழக மருத்துவ மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Supreme Court has adjourned verdict in 85% reservation for State Board Medical Student in Tamil Nadu.
Please Wait while comments are loading...