For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாம்சங் மொபைல் வச்சுருக்கீங்களா? அப்போ உங்களோட ரகசியங்களுக்கு "சங்கு"தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில் குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால் அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம்.

லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் சாம்சங் மொபைல்கள் எவ்வாறு ஊடுருவலாளர்களால் எந்தெந்த வகைகளில் எல்லாம் ஊடுவப்படுகிறது என்பது செய்து காண்பித்தது.

ஊடுருவுவது ஈசி:

ஊடுருவுவது ஈசி:

இதில் சாம்சங் பயன்பாட்டாளர்கள் "ஷிப்ட் கீ" யை அழுத்தினாலே ஊடுருவலாளர்கள் அவர்களின் மொபைலுக்கு ஊடுருவி விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

கேமிராவும் பனால்:

கேமிராவும் பனால்:

ஜி.பி.எஸ் கேமிரா, மைக்ரோபோன் உள்ளிட்ட சென்சார்கள் மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள மலிசியஸ் அப்ளிகேஷனைகளையும் பயன்படுத்தி விட முடியும்.

அம்பலமாகும் அந்தரங்கம்:

அம்பலமாகும் அந்தரங்கம்:

அதுமட்டுமல்ல அந்த மொபைல் எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன அப்ளிகேஷன்கள் உள்ளன போனில் இருந்து செல்லும் அழைப்புக்கள் வரும் அழைப்புக்கள், மெசேஜ்கள், படங்கள் உள்ளிட்ட அனைத்து விபர்களையும் போனில் இருந்து ஊடுவலாளர்கள் எடுத்து விட முடியுமாம்.

எப்படினாலும் முடியும்:

எப்படினாலும் முடியும்:

ஷிப்ட் கீ பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் சாம்சங் மொபைல்களை ஊடுவி விட முடியும் எனவும் செய்முறையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கையில் சாம்சங்:

தடுப்பு நடவடிக்கையில் சாம்சங்:

தங்களது மொபைல்கள் ஊடுவப்படுவதாக பல சாம்சங் வாடிக்கையாளர்கள் அந்நிறுவத்திடம் புகார் தெரிவித்துள்ளனராம். இதனால் இதனை சரிசெய்யும் நடவடிக்கையில் சாம்சங் தற்போது இறங்கி உள்ளதாம்.

English summary
Over 600 million Samsung mobile device users -- including those of the recently-released Galaxy S6 -- have been left exposed to a critical security risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X