ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழுமா? சிஎஸ்ஐஆர் ஆய்வு வெட்கக்கேடு - திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா
கொல்கத்தா: 2024 ஆம் ஆண்டு ராம நவமியின்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலையில் வரும் சூரிய கதிர்கள் விழும் என சிஎஸ்ஐஆர் தெரிவித்து இருப்பது வெட்கக்கேடானது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டி இருக்கிறார்.
எதிர்பார்த்த பாபர் மசூதி இடத்தகராறு வழக்கின் தீர்ப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு வழங்கியது.
அதில். அயோத்தியில் பாபர் மசூதி அமைந்து இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்து பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூமிப்பூஜை
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த ராமர் கோயிலின் தோற்ற புகைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் கோயில் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ரூ.1,800 கோடி
ராமர் கோயில் பணிகள் ரூ.1,800 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதுவரௌ 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு இறுதியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

சூரிய கதிர்கள்
இந்த நிலையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர் அமைப்பின் கீழ் உள்ள மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனமான சிபிஐஆர் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு ராம நவமி அன்று அதில் இருக்கும் ராமர் சிலையின் தலையில் சூரிய கதிர்கள் விழும் என அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

மஹுவா மொய்த்ரா
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "இந்திய அறிவியல் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கே வெட்கப்படுவதாக மூத்த விஞ்ஞானி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பொது நிதிபெறும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சிஎஸ்ஐஆர். நமது வரிப்பணம் இதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இது வெட்கக்கேடு. ஒவ்வொரு நாளும் புதிய இறக்கத்துக்கு செல்கிறோம்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications