குழந்தைகளை கடத்தியதாக சந்தேகம்.. மனநல பாதித்த சகோதரர்களுக்கு அடி உதை.. ஒடிஷாவில் பயங்கரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: பரிபடா பகுதியில் குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மனநலம் பாதித்த இரு சகோதரர்களை கிராம மக்கள் அங்குள்ள மூங்கிலில் கட்டி வைத்தனர்.

பின் அவர்களை தடியைக் கொண்டு சரமாரியாகத் தாக்கினர். வலியில் துடித்த சகோதரர்கள் இருவரும் கதறி அழுதனர். உயிர் பயத்தில் அலறிய அவர்களை தப்பிக்கவிடாமல் கிராம மக்கள் காட்டுமிராண்டித்தனமாக மீண்டும் மீண்டும் தாக்கினர்.

Two persons were attacked in Odisha for Child trafficking

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூட பாராமல், அரக்கத்தனமாக அடித்துத் துன்புறுத்தியவர்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. காயமடைந்த சகோதரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கிராம மக்களுக்கு வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two persons were attacked in Odisha for Child trafficking, condemns on social websites.
Please Wait while comments are loading...