For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்டால் எந்தெந்த பொருட்களின் விலை உயரும், குறையும் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பட்ஜெட்டால் கார்கள், விமான சேவை, வெளியே சாப்பிடுவது போன்றவற்றிற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

Union budget 2016: Things that'll cost dearer and cheaper

புகையிலை பொருட்கள் மீதான வரியை அவர் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் விலை உயரும் பொருட்களின் விபரம்:

கார்கள், சிகரெட்டுகள், புகையிலை, பேப்பரால் சுற்றப்பட்ட பீடி, குட்கா, பில் கட்டுவது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, விமான பயணம், ரெடிமேட் உடைகள், ரூ.1,000க்கு மேலான பிராண்டட் ஆடைகள், தங்கம், வெள்ளி, மினரல் வாட்டர், ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பொருட்கள் வாங்கினால் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும், அலுமினியம் தகடு, பிளாஸ்டிக் பைகள், ரோப்வே, கேபிள் கார் பயணம், இறக்குமதி செய்யப்படும் கவரிங் நகைகள், தொழில் முறை சோலார் வாட்டர் ஹீட்டர், சட்ட சேவைலாட்டரி டிக்கெட்டுகள், வாடகை அடுக்குமாடி பஸ்கள், பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ், விஓபி(வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோட்டோகால்) சாதனங்கள், இறக்குமதி செய்யப்படும் கோல்ப் கார்கள், தங்கக் கட்டிகள்.

விலை குறையும் பொருட்கள்:

காலணிகள், சோலார் விளக்குகள், ரவுட்டர், பிராட்பேண்ட் மோடம்கள், செட்டாப் பாக்ஸுகள், டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர், சிசிடிவி கேமராக்கள். மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் கார்கள், ஸ்டெரிலைஸ்ட் டயாலைசர், 60 சதுர மீட்டர் குறைவாக, குறைந்த விலையில் வாங்கப்படும் வீடுகள், மேடை நிகழ்ச்சிகளுக்கான நாட்டுப்புற கலைஞர்களின் சேவை, மைக்ரோவேவ் அவன்கள், சானிடரி நாப்கின்கள், பிரெய்லி தாள்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய கன்டெய்னர்கள்.

English summary
While cars, air travel will become costly after the Union budget 2016, solar panels, footwear, braille papers will cost less.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X