For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.யில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.... தொங்கு சட்டசபைதான்... ஏபிபி நியூஸ் சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபைதான் அமையும் என்று ஏபிபி நியூஸ், லோக்நிதி சிஎஸ்டிஎஸ் நடத்திய சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க சமாஜ்வாதி கட்சியும் ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவது என பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன.

ஒருகாலத்தில் உத்தரப்பிரதேசத்தில் கோலோச்சிய காங்கிரஸ் எப்படியாவது 10 இடங்களையாவது கைப்பற்றுவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏபிபி நியூஸ், லோக்நிதி சிஎஸ்டிஎஸ் இணைந்து கருத்து கணிப்பை நடத்தின.

UP elections survey forecasts hung Assembly

இக்கருத்து கணிப்பு முடிவுகள்:

  • 30% பேர் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்ப்பதாக கூறியுள்ளனர்.
  • பா.ஜ.க.வுக்கு 27%, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 26% வாக்குகள் கிடைக்கும்.
  • ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 141 முதல் 151 இடங்கள் வரை கிடைக்கும்,
  • பாரதிய ஜனதா கட்சிக்கு 124 முதல் 134 இடங்கள் வரை கிடைக்கலாம்.
  • மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 103 முதல் 113 இடங்கள் வரை கிடைக்கலாம்.
  • காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 14 இடங்கள் வரை கிடைக்கலாம்.
  • சுயேட்சை வேட்பாளர்கள் 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
  • 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 11% ஆதரவு அதிகரித்துள்ளது.
  • 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் பா..ஜ.க.வுக்கு 16% ஆதரவு குறைந்துள்ளது.
  • 2014 லோக்சபா தேர்தலில் தலித்துகளின் பா.ஜ.க. வுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. தற்போது 40% ஆதரவை பா.ஜ.க. இழந்துள்ளது.
  • சிறந்த முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் யாதவ், மாயாவதியும் சரிசமமான பலத்துடன் உள்ளனர். இருவருக்கும் 24% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 202 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
  • தற்போதைய நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. ஆகையால் இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபையே அமையும்.
English summary
Less than a year before Uttar Pradesh holds its elections, a survey by ABP News and Lokniti CSDS has forecast a hung Assembly, with the ruling Samajwadi Party (SP) likely to win most seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X