அருணாச்சலில் விமானப் படை ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி 7 பேர் பலியான வீடியோ வெளியானது

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் சமீபத்தில் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் 7 பேர் பலியாகினர். தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விமானப்படைக்குச் சொந்தமான mi-17 v5 ரக ஹெலிக்காப்டர் அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் என்னும் இடத்தில், 17000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்தனர். யாங்ட்சி பகுதியில் உள்ள இராணுவத்தளத்திற்கு மண்ணெண்னெய் கொண்டு சென்றபோது இந்த விபத்து நடந்தது.

Video showing crashing IAF Helicopter got released

தற்போது அந்த விமானம் வெடித்துச் சிதறும் 19 நொடி வீடியோ காட்சி ஆங்கில ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் விபத்து நடந்தது எப்படி என்பது பதிவாகி இருக்கிறது. விமானத்தின் வால்பகுதியில் ஏற்பட்ட கோளாறால், பின்பக்க இன்ஜின் திடீரென பழுதடைந்து நின்றுபோனதே விபத்துக்கு காரணமாகிப் போனது.

Video showing crashing IAF Helicopter got released

இதில் பலியான ஏழு பேரின் உடலும் சீன எல்லைக்கு அருகில் மீட்கப்பட்டதாக இராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video has emerged which clearly shows the crash of Indian Airforce Helicopter in Arunachal Pradesh earlier this month that killed seven military personnel on board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற