குஜராத் முதல்வராக விஜய் ரூபானி 2-வது முறையாக பதவி ஏற்றார்- மோடி, அமித்ஷா பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குஜராத் முதல்வராக விஜய் ரூபானி 2-வது முறையாக பதவி ஏற்றார்- வீடியோ

  அகமதாபாத்: குஜராத் முதல்வராக 2-வது முறையாக விஜய் ரூபானி இன்று பதவியேற்றார். இப்பதவி ஏற்பு நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

  குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 6-வது முறையாக ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. குஜராத் முதல்வராக 2-வது முறையாக இன்று விஜய் ரூபானி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஓபி கோஹ்லி பதவியேற்பு செய்து வைத்தார்.

  Vijay Rupani takes oath as the Gujarat CM

  துணை முதல்வராக நிதின் பட்டேல் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆட்சி காலத்திலும் நிதின் பட்டேல் துணை முதல்வராக பதவி வகித்தார். குஜராத் பாஜக முன்னாள்தலைவர் ஃபல்து, பூபேந்திரசிங் சுதஷமா, கவுசிக் பட்டேல், சவுரவ் பட்டேல் உள்ளிட்டோரும் பதவியேற்றனர்.

  இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Vijay Rupani took oath as Chief Minister of Gujarat at a ceremony held at the secretariat ground in Gandhinagar on Tuesday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற