For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆருஷி, வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டது ஏன்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவ தம்பதிகளான தல்வாரின் மகள் ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் நெருக்கமாக இருந்ததாலேயே அவர்கள் இருவரும் பெற்றோரால் கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து சிபிஐ தரப்பு கூறுவதாவது:

2008ம் ஆண்டு மே மாதம் 15ந் தேதி நள்ளிரவில் ஆருஷியின் அறையில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்போது எழுந்த ஆரூஷியின் தந்தை ராஜேஸ், வேலைக்காரன் ஹேம்ராஜ் அறையில் எட்டிப்பார்த்திருக்கிறார். அங்கு சப்தம் வரவில்லை.

பின்னர் மகள் ஆருஷி அறையில் சப்தம் வர அவர் சென்று பார்த்த போது இருவரும் படுக்கையில் ஒன்றாக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். இதில் ராஜேஸ் கடும் கோமபடைந்திருக்கிறார்.

கோல்ப் ஸ்டிக்கால் அடி

கோல்ப் ஸ்டிக்கால் அடி

இதனால் அவர் ஹேம்ராஜை முதலில் கோல்ப் ஸ்டிக்கால் அடித்திருக்கிறார் முதல் அடி ஹேம்ராஜ் மீது பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஹேம்ராஜை அடிக்க முயன்ற போது அவன் தலையை திருப்பிக் கொண்டதால் அது ஆருஷியின் தலையில் பட்டுள்ளது.

தம்பதி சகிதமாக மறைப்பு

தம்பதி சகிதமாக மறைப்பு

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார் ராஜேஸ் தல்வாரின் மனைவி நுபுர் தல்வார். அப்போது ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் இருவரும் உயிரிழந்தனர். இதனால் ஆருஷி சடலத்தை அவரது அறையிலேயே விட்டுவிட்டு ஹேம்ராஜ் சடலத்தை மாடியில் போட்டுவிட்டனர்.

தடயங்கள் அழிப்பு

தடயங்கள் அழிப்பு

பின்னர் அனைத்து தடயங்களையுமே ஆரூஷியின் பெற்றோரே அழித்தும் இருக்கின்றனர். இதில் ராஜேஸ் தல்வாரின் உறவினர்கள் இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். கொலையாகக் காட்ட ஆருஷியின் கழுத்தை அறுத்துள்ளனர். ராஜேஷ் டாக்டர் என்பதால் தனது ஆபரேசன் கத்தியை வைத்து அறுத்துள்ளார்.

சட்ட ஓட்டைகள்

சட்ட ஓட்டைகள்

தொடக்கத்தில் உயர் அதிகாரிகள் உதவியுடன் ராஜேஸ் மற்றும் நுபுர் இருவரும் தப்பித்து வந்தனர். பின்னர் பல்வேறு சட்ட ஓட்டைகளையும் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இப்போது சட்டம் அவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.

English summary
Just days before she turned 14, Aarushi was found with her throat slit in her bedroom at the family apartment in Noida on May 16, 2008. Because Hemraj was missing, he was declared the suspect. But hours later, his corpse was found on the terrace of the apartment building. Seven days later, Rajesh Talwar was arrested for the double murder. He was released on bail two months later
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X