காஷ்மீர் தொடங்கி உ.பி வரை.. பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் கொடூரம்.. அமைதி காக்கும் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை-போராட்டங்கள் வலுத்தது

  டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல வழக்குகளில் பாஜக கட்சியினரே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். பாஜக கட்சி தெருவில் இறங்கி போராடியது. அவர்கள் ஆட்சி அமைக்க அதுவே கூட ஒரு காரணம் ஆனது.

  ஆனால் இதோ பாஜக ஆட்சியில் இப்படி வாரம் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தொடங்கி நிர்மலா சீதாராமன் வரை யாரும் இதில் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

  அதிகம்

  அதிகம்

  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததை விட பாஜக கட்சி ஆட்சிக்கு வந்த பின்தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. முக்கியமாக நிறைய பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. டெல்லியில் ஒரு நிகழ்வு பூதாகரமானது போல, மற்ற மாநிலங்களில் மாதம் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. ஆனால் இது மூடி மறைக்கப்படுகிறது.

  பாஜக கட்சியினர் தொடர்

  பாஜக கட்சியினர் தொடர்

  இந்த சம்பவங்கள் அதிகமாக பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அதிகம் நடக்கிறது. அதே போல் இந்த சம்பவம் எல்லாவற்றிலும் பாஜக கட்சியினர் எதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே இது பெரிய அளவில் மூடி மறைக்கப்படுகிறது.

  சம்பவம் 1

  சம்பவம் 1

  தன்னை உ.பி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதில் சுரேந்திர சிங் மரணம் அடைந்தார். இதில் இன்னும் நடவடிக்கை இல்லை.

  இரண்டாவது சம்பவம்

  இரண்டாவது சம்பவம்

  காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மிகவும் தாமதமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.

  மாற்றுகிறார்கள்

  மாற்றுகிறார்கள்

  இந்த இரண்டு சம்பவங்களிலும், பாஜக கட்சியினர் வழக்கை பல இடங்களில் திசை திருப்பி இருக்கிறார்கள். உன்னோவ் வழக்கில் குல்தீப் மீது வழக்கு பதியவே போலீஸ் பயந்தது. இப்போது காஷ்மீர் சிறுமி வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஹிந்துத்துவா அமைப்புகள் ஊர்வலம் செல்கின்றனர். பாஜக கட்சியினர் அதில் கலந்து கொண்டு குற்றவாளிகளை பாராட்டி பேசி இருக்கிறார்கள்.

  அமைதி

  அமைதி

  இந்த சம்பவங்கள் அனைத்திலும் பிரதமர் மோடி அமைதியாகவே இருக்கிறார். தென்னிந்திய பிரச்சனைகளில்தான் மோடி எதுவும் குரல் கொடுப்பது இல்லை என்றால், வடமாநிலங்களை உலுக்கும் விவகாரங்களில் கூட மோடி எந்த விதமான அழுத்தமோ, கண்டனமோ தெரிவிப்பதில்லை. அதே சமயத்தில் பாஜக கட்சியினர், இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைவிட்டுவிட்டு, ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP keeps shut in every rape & killings. In some of the case BJP members accused in the issue. But from Modi to Nirmala Seetharaman no one raises there voice against accused.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற